உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொத்தனுார் டவுன் பஞ்.,ல்சாக்கடை வசதி வேண்டி மனு

பொத்தனுார் டவுன் பஞ்.,ல்சாக்கடை வசதி வேண்டி மனு

ப.வேலுார், டிச. 18--ப.வேலுார் அருகே, பொத்தனுார் டவுன் பஞ்சாயத்து, 6வது வார்டில் வசிக்கும் மக்கள் சாக்கடை வசதி கேட்டு கோரிக்கை மனுவை டவுன் பஞ்., நிர்வாகத்திடம், நேற்று அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 20 ஆண்டுகளாக பொத்தனுார் டவுன் பஞ்., 6வது வார்டில் வசித்து வருகிறோம். முறையாக வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு வடிகால் வசதி, கழிவுநீர் வெளியேற சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இதனால் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறோம். அதனால் சாக்கடை வசதி அமைத்து தரக்கோரி, அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்துள்ளோம். மனுவை பெற்றுக் கொண்ட பொத்தனூர் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ