காந்தி சிலை முன் கோரிக்கை மனு
நாமக்கல்: மோகனுார் தாலுகாவுக்குட்பட்ட, வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூர் ஆகிய நான்கு கிராமங்களில், 806 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க அரசு நடவ-டிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என, அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாவட்டம் மற்றும் மாநில அரசுத்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் குடியரசு தினமான, நேற்று நாமக்கல் வந்த நான்கு கிரா-மங்களை சேர்ந்த பெண்கள், காந்தி சிலை முன் தங்களுடைய கோரிக்கை மனுக்களை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரப-ரப்பு ஏற்பட்டது.