பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மனு
நாமக்கல்: வரகூராம்பட்டி பஞ்சாயத்தை, டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு யூனியன், வரகூராம்பட்டி பஞ்சாயத்தை, டவுன் பஞ்சாயத்தாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் பறிபோகும். எங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, டவுன் பஞ்சாயத்தாக மாற்றிய வரகூராம்பட்டியை, மீண்டும் பஞ்சாயத்தாகவே மாற்றித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.