காவிரி குடிநீர் கேட்டு மனு
நாமக்கல், வையப்பமலை அருகே, காவிரி குடிநீர் தினசரி வழங்கக்கோரி, நாமக்கல் கலெக்டர் உமாவிடம், மா.கம்யூ., கிளை செயலாளர் யோகராஜ் தலைமையில் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வையப்பமலையில், மலைகாவல் அம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு காவிரி குடிநீர், கடந்த, இரண்டு மாதங்களாக வினியோகம் செய்யவில்லை. இங்கு, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றோம். அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி பைப் லைன் இல்லாமல் உள்ளது. காவிரி குடிநீர், கடந்த, இரண்டு மாத காலமாக இல்லாததால் உப்பு தண்ணீரை குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.