வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மனு
வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற மனுநாமக்கல், அக். 29-வளையப்பட்டி அடுத்த வடுகப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அதில், 'நாமக்கல் மாவட்டம், திப்ரமகாதேவி பகுதியில் பெய்யும் மழைநீர், வாய்க்கால் வழியாக பாய்ந்து கருவாட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் கருவாட்டாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து, விவசாயிகளின் பாசனத்திற்கு பேருதவியாக இருந்து வந்தது. சில ஆண்டுகளாக தண்ணீர் செல்லும் வாய்க்காலை, தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மழைக்காலத்தில் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல், அருகே உள்ள விவசாய நிலங்களில் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.எனவே, வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாய்க்காலை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.