இலவச பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு
இலவச பட்டா கேட்டுகலெக்டரிடம் மனு வெண்ணந்துார், வெண்ணந்துார் தங்கச்சாலை வீதி, 3-வது வார்டு பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், 'வெண்ணந்துார் தங்கச்சாலை வீதி பகுதியில், 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். மேலும், நாங்கள் வசிக்கும் வீடுகளில் போதிய அளவு இடவசதி இல்லாததால், நெருக்கடி ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருகிறோம். உறவினர்கள் வந்தால், அமர்வதற்கு கூட இடமில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.