மேலும் செய்திகள்
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு பேரணி
27-Apr-2025
பிளாஸ்டிக்கை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்
29-Apr-2025
ப.வேலுார், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து, நேற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்., அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, பள்ளி சாலை, பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதி வழியாக சென்றது.இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர். மேலும், மக்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.பேரணி முடிவில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாதுகாப்பாக அகற்றுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர்.தொடர்ந்து, பஸ் ஸ்டாப் பகுதி மற்றும் சாலைகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பை, பொருட்களை சேகரித்தனர். ப.வேலுார் டவுன் பஞ்., துாய்மை மேற்பார்வையாளர்கள் வெங்கடேஷ், ஜனார்த்தனன், பஞ்., ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
27-Apr-2025
29-Apr-2025