நிழற்கூடத்தில் பிளக்ஸ் பேனர் பயணிகள் நிற்க இடமின்றி அவதி
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள் பஸ்சில் சென்று வருகின்றனர். பயணிகளின் நலன் கருதி, ஆவத்திபாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிழற்கூடத்தின் முன் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நிற்க இடமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில நாட்களாக இந்த நிழற்கூடத்தை ஆக்கிரமித்து பிளக்ஸ் பேனர் வைப்பது அதிகரித்து விட்டது. நிழற்கூடம் இருப்பதே தெரியாதளவுக்கு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.இதனால், நிழற்கூடம் இருந்தும் பயணிகளால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தற்போது, நிழற்கூடம் பிளக்ஸ் பேனர் வைக்கும் இடமாக மாறிவிட்டது. எனவே, நிழற்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரை அகற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.