தமிழக அரசை கண்டித்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
ப.வேலுார், டிச. 25--ப.வேலுார் தாலுகா அலுவலகம் முன், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாமக்கல் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமை வகித்தார். உழவர் பேரியக்க செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், வன்னியர்களுக்கு, 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, 1,000 நாட்கள் ஆகியும், தமிழக அரசு இட ஒதுக்கீடு வழங்காமல் காலதாமதம் செய்து வருவதை கண்டித்து கோஷம் எழுப்பினர். நாமக்கல் மத்திய வன்னியர் சங்க தலைவர் சித்தார்தன், செயலாளர் வையாபுரி, ப.வேலுார் பா.ம.க., நகர செயலாளர் கணேஷ் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.* திருச்செங்கோடு பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட பா.ம.க.,வினர் பலர் கலந்து கொண்டனர்.