சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ
சிறுமியுடன் திருமணம்வாலிபர் மீது போக்சோமல்லசமுத்திரம், அக். 30-மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி, சின்னபூசாரிக்காடு பகுதியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி. இவரை கடந்த பிப்., 5 முதல் காணவில்லை. இந்நிலையில், வெண்ணந்துார் அருகே, ஓலப்பட்டி, சவுதாபுரத்தை சேர்ந்த சம்பு, 44, என்பவரது மகன் பிரகாஷ், 23, வெல்டிங் தொழிலாளி. இவர், 16 வயது சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தார். பிரகாஷிற்கும், சிறுமிக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், சிறுமி சில தினங்களுக்கு முன், தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரின் பெற்றோர் அளித்த புகார்படி, மல்லசமுத்திரம் போலீசார், நேற்று முன்தினம் காளிப்பட்டி பகுதியில் இருந்த பிரகாஷை, போக்சோ வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து, திருச்செங்கோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.