தலைமறைவு குற்றவாளியை மடக்கி பிடித்த போலீசார்
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, களியனுார் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன், 34; இவர் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ஜாமினில் வெளியே வந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல், இரண்டு ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், ஒட்டமெத்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக பள்ளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த ஜனார்த்தனனை மடக்கி பிடித்தனர்.