உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேட்பாரற்ற டூவீலர் போலீசார் பறிமுதல்

கேட்பாரற்ற டூவீலர் போலீசார் பறிமுதல்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள புதிய பாலத்தில், நேற்று காலை கேட்பாரற்ற நிலையில் டூவீலர் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. வண்டியில் ஒரு பையும் இருந்தது. நீண்ட நேரமாகியும் டூவீலருக்கு யாரும் உரிமை கோராததால், பள்ளிப்பாளையம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், டூவீலரை கைப்பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச்சென்றனர். டூவீலர் யாருடையது, எப்படி பாலத்திற்கு வந்தது என்பது குறிதது போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !