உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவில் இடங்களை ஆக்கிரமித்து கடைக்கு அனுமதி தடுத்து நிறுத்த பொன் மாணிக்கவேல் வேண்டுகோள்

கோவில் இடங்களை ஆக்கிரமித்து கடைக்கு அனுமதி தடுத்து நிறுத்த பொன் மாணிக்கவேல் வேண்டுகோள்

நாமக்கல், ''கோவில்களுக்கு சொந்தமான இடங்களை, அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து கடைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும்,'' என, முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.நாமக்கல் ஆஞ்சநேயர், நரசிம்மர் சுவாமி கோவிலில், முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், கோவில்களை புனரமைப்பதற்காக தோண்டும்போது கிடைக்கும் சிலைகளை, அந்தந்த கோவில்களுக்கே வழங்க வேண்டும். சென்னையில், 2,500 சிலைகள், தஞ்சையில், 452 சிலைகள் என, 80 சதவீத சிலைகள், கோவில்கள் புனரமைப்பு பணியின் போது கிடைத்தது தான். அவை அருங்காட்சியகத்தில் வைக்காமல், சம்பந்தப்பட்ட கோவில்களுக்கே வழங்கி பூஜை செய்ய வேண்டும். சுதந்திரத்திற்கு முன் இதுபோன்று சிலைகள் கண்டெடுக்கப்பட்டால், அவை அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கே வழங்கப்பட்டன. ஆனால், சுதந்திரத்திற்கு பின்பு தான், காட்சிப்பொருளாக வைக்கப்படுகின்றன. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்படும் தெய்வ விக்கிரகங்களை, அருங்காட்சியகத்தில் வைப்பது குறித்து, இரண்டு மாதங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். மேலும், கோவில்களுக்கு சொந்தமான இடங்களை அரசியல்வாதிகள் ஆக்கிரமித்து கடைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை