உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தாழமுனியப்பன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

தாழமுனியப்பன் கோவிலில் பொங்கல் விழா கோலாகலம்

வெண்ணந்துார், வெண்ணந்துார் அடுத்த அத்தனுார் டவுன் பஞ்.,க்கு உட்பட்ட, தேங்கல்பாளையம் செல்லும் சாலையில், பிரசித்தி பெற்ற தாழமுனியப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆவணி மாதத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக நடப்பது வழக்கம். நடப்பாண்டு விழா கடந்த, 2-ம் தேதி தொடங்கியது. 3-ம் தேதி இரவு தாழமுனியப்பன் அலங்கரிக்கப்பட்டு, வாகனத்தின் மூலம் அருகில் உள்ள தட்டான்குட்டைபுதுார் வரை ஊர்வலமாக சென்று பின்னர் கோவில் வந்து சேர்ந்தார்.முக்கிய நிகழ்வாக நேற்று காலை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாழமுனியப்பனுக்கு பல்வேறு திரவியங்களுடன் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்தும், 20க்கும் மேற்பட்ட கிடா, 50க்கும் மேற்பட்ட சேவல்களை வெட்டியும் வழிபட்டனர். வரும் 7-ம் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. அத்தனுார், தேங்கல்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை