உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொங்கல் பரிசு தொகுப்புடோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்புடோக்கன் வினியோகம்

ராசிபுரம், ஜன. 4-தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டை தாரர்களில், சர்க்கரை அட்டை தாரர்களை தவிர மற்ற அனைவருக்கும், தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டுள்ளது.அரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, ஒரு கரும்பு ஆகியவையுடன் வேட்டி சேலையும் வழங்கப்படுகிறது. இதற்கான பொருட்களில் கரும்பை தவிர மற்றவை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும்போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, முன்கூட்டியே ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி, நேற்று தொடங்கியது.ராசிபுரம் தாலுகாவில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. இவர்களுக்கு அந்தந்த ரேஷன் கடை மூலம் டோக்கன் வழங்கும் பணி, நேற்று தொடங்கியது. 9ம் தேதியில் இருந்து டோக்கனில் உள்ள தேதி, நேரப்படி அந்தந்த ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என, வட்ட வழங்கல் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு விற்பனையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 199, 499, 999 ரூபாய் என்ற விலைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ