பொங்கல் தொகுப்பு விற்பனை துவக்கம்
ராசிபுரம்: ராசிபுரம் கூட்டுறவுத்துறை சார்பில், 'கூட்டுறவு பொங்கல்' என்ற பெயரில், பொங்கல் வைப்பதற்கான பொருட்களின் தொகுப்பு விற்பனை துவக்க விழா, நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அருளரசு, நகராட்சி சேர்மன் கவிதா, ஒன்றிய தலைவர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதல் விற்பனையை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் தொடங்கி வைத்தனர். 199 ரூபாய் மதிப்பிலான பொங்கல் தொகுப்பில் மஞ்சள், பச்சரிசி, முந்திரி, திராட்சை, பெரிய சைஸ் மஞ்சள் பை உள்ளிட்ட, 8 பொருட்களும், 499 ரூபாய் மதிப்பிலான தொகுப்பில், 20 பொருட்களும், 999 ரூபாய் மதிப்பிலான தொகுப்பில், 35 பொருட்களும் என, 3 விலைகளில், 3 தொகுப்புகளாக விற்பனை செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறையினர் தெரிவித்தனர்.