மேலும் செய்திகள்
ஆனி அமாவாசையையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
26-Jun-2025
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டையில் இருந்து ஆத்துார் செல்லும் சாலையில், மெட்டாலா கணவாய் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. குடைவரை கோவிலான இங்கு, சுற்றிலும் வனப்பகுதியாக உள்ளது. இக்கோவிலில் பங்குனி மாதத்தில் தீமிதி விழா நடப்பது வழக்கம். மேலும், புரட்டாசி சனிக்கிழமை, ஏகாதசி, தமிழ் மாத பிறப்பு நாட்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறும். அதன்படி, நேற்று ஆடி மாதம் ஏகாதசியையொட்டி, ஆஞ்சநேயருக்கு செந்துாரத்தில் அலங்காரம் செய்து எலுமிச்சை மாலை அணிவித்திருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
26-Jun-2025