உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளி ஆர்டருக்காக காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள்

தீபாவளி ஆர்டருக்காக காத்திருக்கும் ப.பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள்

பள்ளிப்பாளையம்:'ஜவுளி விற்பனை மந்தத்தால், தீபாவளி பண்டிகை சமயத்தில் வழக்கமான ஆர்டர் வரும்; விற்பனையும் அதிகளவு இருக்கும்' என, பள்ளிப்பாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில், 25,000க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. இங்கு, சட்டை, வேட்டி, துண்டு, லுங்கி, சேலை உள்ளிட்ட துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் துணிகள், ஈரோட்டில் உள்ள வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவர்கள், தமிழகம், கேரளா மட்டுமின்றி, இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்புகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை சமயத்தில், இரண்டு மாதத்திற்கு முன்பே ஆர்டர் அதிகளவு வரத்தொடங்கும். இதனால், இரவு, பகலாக ஜவுளி உற்பத்தி நடக்கும். கடந்த பல மாதங்களாக ஜவுளி விற்பனை தொய்வால், ஆர்டர் ஏதுமின்றி ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும், இரண்டு மாதமே உள்ளதால், வழக்கமான ஆர்டர் வரும்; விற்பனையும் அதிகரிக்கும் என, எதிர்பார்த்துள்ள னர். பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ''ஜன., முதல் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் லுங்கி, வேட்டி, சேலை உள்ளிட்ட துணிகள் விற்பனை குறைந்ததால், உற்பத்தி பாதிக்கப்பட்டது. வழக்கமாக ஆடிப்பெருக்கு முடிந்தவுடன், துணி வகைகளுக்கு, தீபாவளி ஆர்டர் வந்து விடும். உற்பத்தி, விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும். கடந்தாண்டு, இரண்டு மாதத்திற்கு முன்பே ஆர்டர் வந்தது. இந்தாண்டு, இன்னும் ஆர்டர் வரவில்லை. தீபாவளி ஆர்டருக்காக எதிர்பார்த்து காத்துள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை