உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவரால் பரபரப்பு

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய தனியார் பஸ் டிரைவரால் பரபரப்பு

ராசிபுரம்:ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ் கண்டக்டரை தனியார் பஸ் டிரைவர் தாக்கும் காட்சி வைரலாகி வருகிறது.ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. சில நாட்களுக்கு முன்பு, அரசு, தனியார் பஸ் ஓட்டுனர், நடத்துனர் இடையே பஸ்களை இயக்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ராசிபுரம் புதிய பஸ் ஸ்டாண்டிலிருந்து, சேந்தமங்கலம் நோக்கி சென்ற தனியார் பஸ் காலை, 8:20 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் டிரைவர் முருகேசன், 8:25 மணி வரை பஸ்சை அங்கேயே நிறுத்தி வைத்திருந்தார்.இதனால், அடுத்து செல்ல வேண்டிய அரசு பஸ் கண்டக்டர் குமரேசன், தனியார் பஸ் டிரைவரிடம், நேரமாகி விட்டதால் பஸ்சை எடுக்குமாறு கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனியார் பஸ் டிரைவர் முருகேசன், அரசு பஸ் கண்டக்டர் குமரேசனை சரமாரியாக தாக்கினார். இதை அங்கிருந்த பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்போது டிரைவர் தாக்கும் வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி