மேலும் செய்திகள்
கூலித்தொழிலாளி மீது கார் மோதி விபத்து
04-Sep-2025
சிறுவன் மீது மோதிய கார் டிரைவர் தலைமறைவு
28-Aug-2025
குமாரபாளையம் குமாரபாளையம்-பள்ளிப்பாளையம் சாலை, கவுரி தியேட்டர் அருகே, நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, 'பஜாஜ் பிளாட்டினா' டூவீலர் மற்றும் 'மாருதி ஆம்னி' கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், டூவீலரில் வந்தவர் படுகாயமடைந்து சிறிது நேரத்தில் உயிரிழந்தார். குமாரபாளையம் போலீசார் நடத்திய விசாரணையில், டூவீலரில் வந்தவர் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன், 30, தனியார் நிறுவன பணியாளர் என்பது தெரியவந்தது. கார் டிரைவரர், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
04-Sep-2025
28-Aug-2025