உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தனியார் காகித ஆலை பணியாளர்கள் பேரணி

தனியார் காகித ஆலை பணியாளர்கள் பேரணி

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் காகித ஆலை பணியாளர்கள் கூட்டு சங்ககளின் சார்பில், நேற்று மாலை, பள்ளிப்பாளையம் அடுத்த கீழ் காலனி பகுதியில் பேரணியாக சென்றனர். இதுகுறித்து, தொ.மு.ச., தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ''சேஷசாயி காகித ஆலை பணியாளர்களுக்கு, கடந்த, 2019ல் போட்டப்பட்ட ஒப்பந்தம், 2024 மார்ச் மாதம் முடிந்து விட்டது. ஒப்பந்தம் காலவாதியாகி, 18 மாதங்கள் ஆகிவிட்டது. புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் போடுவதற்கு, பல கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், பேச்சு வார்த்தை இழுபறியாக உள்ளது. உடனடியாக புதிய ஒப்பந்தம் போட வேண்டும் என, வலியுறுத்தி நேற்று பேரணி நடந்தது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !