உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஜூலை 5ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

ஜூலை 5ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 5ம் தேதி காலை 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா இன்ஜினியரிங் கல்லுாரியில், கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.முகாமில் ஐந்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகள், தையற்பயிற்சி, நர்சிங்பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்கள் பங்கேற்று வேலை வாய்ப்பு பெறலாம். 150-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர். தங்களுடைய பயோ டேட்டா, உரிய கல்விச் சான்று மற்றும் ஆதார்அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும்.முகாமில் டி.டி.யு., ஜி.கே.ஒய்., திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புறத்தில், பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம், 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். முகாம் முற்றிலும் இலவசம். வேலையளிப்போரும், வேலைநாடுனர்களும் www.tnprivatejobs.tn.gov.inஎன்ற வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் முகாமில் கலந்து கொள்ள 04286- 222260 தொலைபேசி எண் அல்லது 6380369124 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி