ரசாயன தொழிற்சாலைகளில் மதுவிலக்கு போலீசார் ஆய்வு
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலைகளில், திருச்செங்கோடு மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.திருச்செங்கோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாவதி தலைமையில் போலீசார், நேற்று பள்ளிப்பாளையம் அருகே, காடச்சநல்லுார், ஆலாம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ரசாயனங்கள், சயின்டிபிக் மற்றும் கெமிக்கல் தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரசாயனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, அவை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து விசாரித்தனர். மேலும், ரசாயனம் வாங்குவோர் விபரங்களை முறையாக பராமரிக்க வேண்டும். விற்பனை செய்தல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபடுதல் போன்றவைகளை மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது.