உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மலைப்பாதை அமைக்கும் பணி திட்ட இயக்குனர் ஆய்வு

மலைப்பாதை அமைக்கும் பணி திட்ட இயக்குனர் ஆய்வு

மல்லசமுத்திரம், வையப்பமலை, மலைக்குன்றில் பாதை அமைக்கும் பணியை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை மலைக்குன்றில் பழமைவாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்கிழமை உள்ளிட்ட தினங்களில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும், பங்குனி உத்திரத்தன்று, தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு, பக்தர்கள் படி மூலமாகதான் செல்ல வேண்டும் என்பதால் மக்கள் சிரமப்பட்டனர். மக்கள் அளித்த கோரிக்கை அடிப்படையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மூலம், ரூ.4 கோடியே 55 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில், எஸ்.சி.பி.ஏ.ஆர்., 2024-25 திட்டத்தின்கீழ், கடந்த மார்ச், 3ல். பூமி பூஜை போடப்பட்டு தற்சமயம், மலைக்குன்றில் பாதை அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.இப்பணியை, நேற்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல் ஆய்வு செய்தார். மல்லசமுத்திரம் பி.டி.ஓ., பாலவிநாயகம், உதவி பொறியாளர்கள் அருண், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை