மேலும் செய்திகள்
100 நாள் வேலை கேட்டு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
29-Jul-2025
நாமக்கல், நாமக்கல் மாவட்ட கல் குவாரி எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன், சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் செல்லப்பன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கனிமவளத்துறை சார்பாக மனு கொடுக்க வரும் பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களை ஒருமையில் பேசும், மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை கனிமவளத்துறை உதவி இயக்குனர் சத்தியசீலனை,கண்டித்தும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும், அவரை இடமாற்றம் செய்யக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், எலச்சிபாளையம், கோக்கலை, எளையாம்பாளையம், பரமத்தி, சித்தம்பூண்டி, மல்லசமுத்திரம், மொஞ்சனுார் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
29-Jul-2025