உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, திருச்செங்கோடு அடுத்த மொளசி முனியப்பன்பாளையம் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க திட்டமிடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் எரிவாயு தகன மேடைக்கு செல்லும் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை, பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றும் பணி நேற்று நடந்தது. அப்போது அங்கு திரண்ட ஊர் மக்கள், 'எரிவாயு தகனமேடை ஏற்கனவே, 2 கி.மீ., தொலைவில் உள்ள மச்சான்பாளையத்தில் உள்ளது. எனவே, எரிவாயு தகனமேடை முனியப்பன்பாளையத்தில் தேவை இல்லை. எரிவாயு தகன மேடை அமைக்க உள்ள பகுதியை சுற்றிலும் கரும்பு தோட்டம் உள்ளது. எரிவாயு தகன மேடை அமைந்தால், கரும்பு தோட்டத்திற்கு பெண்கள் வேலைக்கு வரமாட்டார்கள்' என, எதிர்ப்பு தெரிவித்தனர். திருச்செங்கோடு தாசில்தார் கிருஷ்ணவேணி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சாந்தி, வருவாய் அலுவலர் பிரியா, கிராம நிர்வாக அலுவலர் குணசேகரன், பள்ளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடையாததால், பணியை பாதியில் நிறுத்தி அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் முனியப்பன் கோவில் தோட்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை