உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேர் திருவிழாவில் மறியல் போராட்டம்

தேர் திருவிழாவில் மறியல் போராட்டம்

எருமப்பட்டி, எருமப்பட்டி யூனியன், தேவராயபுரத்தில் ஸ்ரீபாலாயி அம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு செந்தமான இக்கோவிலில், திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் மோதலால், 17 ஆண்டுக்கு முன் திருவிழா நிறுத்தப்பட்டது. அதன்பின், சில தினங்களுக்கு முன் ஊர் மக்கள் ஒன்று கூடி நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று கோவில் திருவிழா நடத்த முடிவு செய்தனர். அரசு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. பின், திருவிழாவின் தொடக்கமாக, தீர்த்தக்குட ஊர்வலம், கடந்த, 22ல் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா, நேற்று நடந்தது. அப்போது, ஒரு தரப்பினர், தேர் எங்கள் பகுதிக்கும் வர வேண்டும் எனக்கூறி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு சென்ற நல்லிபாளையம் இன்ஸ்பெக்டர் யுவராஜ், தாசில்தார் வெங்கடேசன், ஹிந்து சமய அறநிலையத்துறை ஆர்.ஐ., வினோதினி ஆகியோர், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இதனால், நாமக்கல்-து‍றையூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின், தேர் திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை