மேலும் செய்திகள்
கரூரில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
06-Sep-2025
பள்ளிப்பாளையம் :தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கொக்கராயன்பேட்டை பகுதியில், மா.கம்யூ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பள்ளிப்பாளையம் அருகே, கொக்கராயன்பேட்டையை சேர்ந்தவர் நிர்மலா; இவர், கொக்கராயன்பேட்டை மா.கம்யூ., கட்சியின் கிளை செயலாளராக உள்ளார். நிர்மலா மற்றும் இவரது மகள் ஆகியோர் மீது திட்டமிட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய அப்பகுதியை சேர்ந்த சசிகுமார், ராஜா, சிவா மற்றும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி, நேற்று மா.கம்யூ., கட்சி சார்பில், கொக்கராயன்பேட்டை பஸ் ஸ்டாப் பகுதியில் கண்டன் ஆர்ப்பாட்டம், மாவட்ட குழு உறுப்பினர் ரவி தலைமையில் நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், ஒன்றிய செயலாளர் லட்சுமணன் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
06-Sep-2025