உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

மல்லசமுத்திரம் :மல்லசமுத்திரம் யூனியன், ராமாபுரம் பஞ்.,க்குட்பட்ட அண்ணமார் நகர், சுமங்கலி நகர் ஆகிய பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள் நேற்று, ராமாபுரம் பஞ்., அலுவலகம் முன் திரண்டு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பூபதி தலைமையில், காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'விரைவில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் அக்., 2ல், காந்தி ஜெயந்தி அன்று, ராமாபுரம் ஊராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை