காலி பணியிடங்களை நிரப்ப ஆர்ப்பாட்டம்
நாமக்கல்: 'காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பினர் சார்பில், நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட கிளை தலைவர் சவுர்ந்தர்ராஜன் தலைமை வகித்தார். அதில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 2023 டிச., 1 முதல் மின்வாரிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் காணும் வரை, 2023 டிச., 1 முதல் இடைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் வழங்க வேண்டும். நாமக்கல் மின் வட்டத்தில் ஊர் மாற்றும் உத்தரவு பெற்ற, 'கேங்மேன்' ஊழியர்களை பணிவிடுப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.