2 மணி நேரம் மின்தடையால் பொதுமக்கள் அவதி
பள்ளிப்பாளையம், காவிரி சுற்றுவட்டாரத்தில், நேற்று மதியம் இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், பொதுமக்கள் அவதிப்பட்டனர்.பள்ளிப்பாளையம் அருகே காவிரி, பிரேம்நகர், கரட்டாங்காடு, வசந்தநகர், முனியப்பன்நகர், மற்றும் இதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று மதியம், 12:00 மணி முதல் 2:30 மணி வரை மின்தடை ஏற்பட்டது. திடீரென அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்களும், விசைத்தறி தொழிலாளர்களும் மிகவும் அவதிப்பட்டனர்.இது குறித்து மின்வாரிய பணியாளர்கள் கூறுகையில், 'மின் ஒயரில் உரசியபடி இருந்த மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. இப்பணி முடிந்தவுடன் மின்சாரம் வழங்கப்பட்டது,' என்றனர்.