உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குப்பை கொட்டி தீ வைப்பு புகையால் பொதுமக்கள் அவதி

குப்பை கொட்டி தீ வைப்பு புகையால் பொதுமக்கள் அவதி

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் அருகே, குமரன் நகர், ராமகிருஷ்ணா நகர் பகுதிகளை இணைக்கும் வகையில், ஓடையின் குறுக்கே பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக டூவீலர், கார், சரக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும், அப்பகுதி மக்கள் ஆற்றுக்கும், கோவிலுக்கும் இந்த பாலம் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இந்த பாலத்தின் கீழ் பகுதியில், குப்பை கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இங்கு கொட்டப்படும் குப்பைகளை அடிக்கடி தீயிட்டு கொளுத்துகின்றனர்.இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதியடைகின்றனர். நேற்று, மர்ம நபர்கள் பாலத்தின் கீழ் கொட்டிக்கிடந்த குப்பைக்கு தீ வைத்தனர். இதனால், அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி