மேலும் செய்திகள்
கடைக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு
30-Sep-2025
சேந்தமங்கலம்,காளப்பநாயக்கன்பட்டி அருகே, வயல்வெளியில் சிக்கிய, ஆறு அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர், வனத்தில் பத்திரமாக விட்டனர்.சேந்தமங்கலம் அடுத்த காளப்பநாயக்கன்பட்டி, தேன் கூடு புளியமரம் பகுதியை சேர்ந்தவர் லலித் குமார்; இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது, ஆறு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் தீயணைப்புத்துறையினர், மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, கொல்லிமலை வனத்தில் கொண்டு சென்றுவிட்டனர்.
30-Sep-2025