மேலும் செய்திகள்
சாலையில் வெள்ளைக்கோடுவரையும் பணி தீவிரம்
06-Apr-2025
ராசிபுரம், ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்-2024-25ல், ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரி முதல் சீராப்பள்ளி வரை இருவழிப்பாதையாக அகலப்படுத்தும் பணி, சில மாதங்களாக நடந்து வந்தது. அதுமட்டுமின்றி, கவுண்டம்பாளையம் பகுதியில் இடைவழி பாதையை, இருவழி பாதையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியும் முடிந்துள்ளது. இப்பணிகள், 5.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்துள்ளது. இதை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார் ஆய்வு செய்தார். ஆய்வில், சாலையின் தரம், கனம் சரிபார்க்கப்பட்டது.கோடை காலத்தில் சாலையோர மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கவும், மழை காலத்திற்கு முன்பாக சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார். உடன் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஸ்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
06-Apr-2025