உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சூறை காற்றுடன் மழை

சூறை காற்றுடன் மழை

ராசிபுரம்: ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் காலையில் வெயில் கொளுத்தி-னாலும், மதியத்திற்கு மேல் வானம் மேக மூட்டத்துடன் காணப்-பட்டது. மாலை, 4:30 மணியளவில் ராசிபுரம் சுற்று வட்டார பகு-தியில் சூறைக்காற்று வீசியது. இதனால் பல இடங்களில் கூரைகள் காற்றில் பறந்தன. இதனால், சாலையில் டூவீலரில் செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர். சிறிது நேரத்தில் காற்று குறைந்து மழை பெய்ய தொடங்கியது. ராசிபுரம், புதுப்பா-ளையம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி, அணைப்பா-ளையம், சீராப்பள்ளி, காக்காவேரி, பட்டணம், நாமகிரிப்-பேட்டை, தண்ணீர்பந்தல்காடு உள்ளிட்ட பகுதிகளில், 45 நிமிடம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்-டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி