மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டையில் ஆலங்கட்டி மழை
08-May-2025
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வெயில் கொளுத்தியது. இந்நிலையில், மாலை, 5:30 மணியளவில் திடீரென மேகம் சூழ்ந்து வானம் இருண்டது. சிறிது நேரத்தில் காற்றுடன் கன மழை பெய்தது. 5:30 மணிக்கு தொடங்கிய மழை, 6:00 மணிவரை பெய்தது. திடீர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியதால் தட்பவெட்ப நிலை மாறியது.
08-May-2025