உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிக்குள் தேங்கிய மழைநீர்

பள்ளிக்குள் தேங்கிய மழைநீர்

மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் சுற்றுவட்டாரத்தில், நேற்று மாலை, 4:30 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால், மல்லசமுத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியது. மாணவியர் வகுப்பு முடிந்து வீட்டிற்கு செல்லும் நேரம் என்பதால், சைக்கிள்களை ஓட்டிச்செல்ல சிரமப்பட்டனர். ஒரு சில மாணவியர் வழுக்கி சேற்றில் விழுந்தனர். இதனால், பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் செல்லாதபடி, வடிகால் வசதி அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ