உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொக்லைன் மூலம் துார்வாரப்பட்ட மழைநீர் வடிகால் கழிவுகள்

பொக்லைன் மூலம் துார்வாரப்பட்ட மழைநீர் வடிகால் கழிவுகள்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் செல்லும் மழை நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, குப்பை, கழிவுகள் பொக்லைன் மூலம் துார்வாரப்பட்டது. பள்ளிப்பாளையம் பகுதியில் ஒட்ட மெத்தை மற்றும் பாலம் சாலையில் மழைநீர் வடிகால் செல்கிறது. இந்த மழைநீர் வடிகாலில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குப்பை, கழிவு பொருட்களும் குவிந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்தால், மழை நீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்படும். கனமழை பெய்தால் சாலையில் மழை நீர் செல்லும். விரைவில் பருவமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பள்ளிப்பாளையம் நகராட்சி சார்பில், நேற்று மழை நீர் வடிகாலில் ஏற்பட்டுள்ள அடைப்பு, குப்பை, கழிவுகளை பொக்லைன் மூலம் துார்வாரப்பட்டு அகற்றப்பட்டது. மேலும் மழை நீர் சீராக செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை