உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை

மொபைல் கடையில் திருட்டு ராசிபுரம் போலீசார் விசாரணை

ராசிபுரம், ராசிபுரம் அடுத்த குருக்கபுரம் பகுதியில் தமிழரசன் என்பவர், மாருதி மொபைல்ஸ் என்ற பெயரில் மொபைல் போன்கள் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு, கடையை பூட்டி சென்றனர். பின், நேற்று கடையை திறக்க வந்த கடை ஊழியர்கள், கடையின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தமிழரசன், கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அதிகாலை, 2:00 மணியளவில் கடைக்கு வந்த மர்ம நபர், கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்கிறார்.பின், கடையில் இருந்த, ஒன்பது புதிய மொபைல் போன்கள் மற்றும் சர்வீசுக்காக கொண்டுவரப்பட்ட மொபைல் போன்கள், ரொக்க பணம், 6,000 ரூபாய் மற்றும் பல்வேறு உபரி பொருட்கள் உள்ளிட்டவை திருடிக்கொண்டு சாவகாசமாக செல்வது தெரியவந்தது.கடையில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை கைகளை கொண்டு மறைத்தபடி, மர்ம நபர் திருடியுள்ளார். ஆனால், அவர் முகம் தெரியும் அளவிற்கு வீடியோக பதிவாகி உள்ளது. இதுகுறித்து புகார்படி, ராசிபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி