உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 2 போலீசாரை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை

பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 2 போலீசாரை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரை

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், ஆந்திர மாநில இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கைதான, 2 போலீஸ்காரர்களை, நிரந்தரமாக பணியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்ய, மாவட்ட எஸ்.பி., சுதாகர், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.திருவண்ணாமலையில், ஆயுதபூஜைக்கு வாழைப்பழங்களை விற்க, ஆந்திராவில் இருந்து, மினிலாரியில், வாழைப்பழம் லோடு ஏற்றிக்கொண்டு, ஆந்திராவை சேர்ந்த, 50, வயது பெண், தன், 25, வயது மகள் மற்றும் உறவினரான, 30 வயது வாலிபருடன் நேற்று முன்தினம், 2:30 மணி அளவில் வந்தார். திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் ஏந்தல் பகுதியில், வாகன சோதனையில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் காவலர்கள், சுரேஷ்ராஜ், 33, சுந்தர், 39, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மினி லாரியை நிறுத்தி, அதில் வந்த, தாய் மற்றும் மக‍ளை விசாரணை என்ற பெயரில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இருட்டான புதர் பகுதிக்கு அழைத்துசென்று மிரட்டி, 25 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். அப்பெண் புகார் படி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார், இரு போலீசாரையும் கைது செய்தனர். அவர்களை மாவட்ட எஸ்.பி., சுதாகர், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து இருவரையும் பணியிலிருந்து, 'டிஸ்மிஸ்' செய்ய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை