உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆதித்தமிழர் பேரவையின் மண்டல செயற்குழு கூட்டம்

ஆதித்தமிழர் பேரவையின் மண்டல செயற்குழு கூட்டம்

திருச்செங்கோடு :திருச்செங்கோட்டில், ஆதித்தமிழர் பேரவையின் மேற்கு மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். ஆதித் தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் பேசினார். கூட்டத்தில், மாவட்ட தலைவர் வேங்கை மார்பன், மாநில தொண்டரணி செயலாளர் தமிழரசு, திருச்செங்கோடு நகர செயலாளர் முத்துசாமி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், 44 தனி தொகுதிகள் உள்ளன. இதில், ஆதிதிராவிடர்களுக்கு, 29 தொகுதி, தேவேந்திர குல வேளாளர்களுக்கு, 14 தொகுதி, அருந்ததியர்களுக்கு, மூன்று தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது.சமநிலையற்ற இந்த நிலையை மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க., கூட்டணியில் தற்போது எங்களுக்கு, மூன்று இடம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலில் கூடுதல் இடங்கள் கேட்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை