மேலும் செய்திகள்
கால்பந்து போட்டி
13-Jan-2025
நாமக்கல்: தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளையொட்டி, நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில், குதிரை ரேக்ளா போட்டி, மோகனுார் ஒன்றியம், என்.புதுப்பட்டியில் நடந்தது. நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 44 குதிரைகள் கலந்து கொண்டன. புதிய, சிறிய, பெரிய குதிரை என, மூன்று பிரிவுகளில், நான்கு முறை போட்டி நடத்தப்பட்டது.அதில், சிறிய குதிரை போட்டியில், கரூர் எஸ்.கே.,பிரதர்ஸ், குளித்தலை எம்.ஆர்., நிமிலன், சேலம் கொம்பன் பாய்ஸ் ஆகியவை, முதல் மூன்று இடங்களை பிடித்தன. புதிய குதிரை போட்டியில், பவானி ஆனந்த், தொட்டச்சேரி யமஹா மணி, மோகனுார் பிரகாஷ் ஆகிய குதிரைகள், முதல் மூன்று இடங்களை பிடித்தன. பெரிய குதிரைக்கான போட்டியில், மோகனுார் பிரகாஷ் முதல் பரிசும், திருச்சி உறையூர் நம்பி உதயசூரியன், இரண்டு, மூன்றாம் பரிசும் பெற்றது. தொடர்ந்து, நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, ஒன்றிய தி.மு.க., செயலாளர் நவலடி தலைமை வகித்தார்.ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வேலுபாலாஜி வரவேற்றார். தி.மு.க., மாவட்ட செயலாளரும், எம்.பி.,யுமான ராஜேஸ்குமார், வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கி பாராட்டினார்.
13-Jan-2025