கொல்லிமலை அரசு பள்ளியில் பழமையான மரங்கள் அகற்றம்
சேந்தமங்கலம்:கொல்லிமலை, செம்மேட்டில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில், 30 ஆண்டுகளுக்கு முன் யூகலிப்டஸ், சில்வர் ஓக் மரங்கள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன், கொல்லிமலையில் வீசிய சூறாவளி காற்றில், பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு மரத்தின் கிளை உடைந்து, அந்த வழியாக சென்ற பள்ளி மாணவி மீது விழுந்தது.இதையடுத்து, பழமையான மரங்களை அகற்ற வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால், நேற்று பள்ளி வளாகத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.