உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அனுமதியின்றி வைத்தபிளக்ஸ் பேனர் அகற்றம்

அனுமதியின்றி வைத்தபிளக்ஸ் பேனர் அகற்றம்

பள்ளிப்பாளையம்:பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்ட், பிரிவு சாலை, மேம்பாலத்தின் கீழே, ஒன்பதாம்படி உள்ளிட்ட பகுதிகளில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனத்தினர், பேனர்கள் வரிசையாக வைத்துள்ளனர். இவ்வாறு வைக்கப்பட்டுள்ள பேனர்களால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. மேலும், தற்போது கோடை மழை சூறாவளி காற்றுடன் பெய்வதால், பிளக்ஸ் பேனர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் சாய்ந்து வருகின்றன. சில பேனர்கள் கிழிந்து, மின் ஒயர் மீது விழுந்து கிடக்கின்றன. இதனால் ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று உரசி மின்தடை ஏற்படுவது, தீப்பொறி பறப்பது போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதனால் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்று சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ