மேலும் செய்திகள்
சிவாயம் பஞ்சாயத்தில் துாய்மை பணி
21-Nov-2025
பள்ளிப்பாளையம்: களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்தபாளையம் பகுதியில், மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, விளையாட்டு மைதானம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், களியனுார் பஞ்சாயத்துக்குட்பட்ட ஆவத்திபாளையம் பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. அப்பகுதி இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக, விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டதால் முட்புதர்கள் வளர்ந்து, குண்டும் குழியுமாக மாறிட்டதால் பயன்பாடு இல்லாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் விளையாட்டு மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர களியனுார் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக, நேற்று பொக்லைன் மூலம் விளையாட்டு மைதானத்தை சமன்படுத்தும் பணி நடந்தது.
21-Nov-2025