நாமக்கல், கோவைக்கு அரசு பஸ் விட கோரிக்கை
குமாரபாளையம்: குமாரபாளையத்தில் இருந்து நாமக்கல், கோயம்புத்துாருக்கு அரசு பஸ் விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்திலிருந்து, கோயம்புத்துாருக்கு செல்வதென்றால் பவானி, லட்சுமி நகர் அல்லது ஈரோட்டிற்கு சென்று அங்கிருந்து செல்ல வேண்டி உள்ளது. அதேபோல் நாமக்கல் செல்ல வேண்டும் என்றால், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு செல்ல வேண்டும். குமாரபாளையம் பகுதியில் ஹேண்ட்லுாம், பவர்லுாம் ஜவுளி உற்பத்தி அதிகம் என்பதால் கோவை வியாபாரிகள் மற்றும் வடமாநில வியாபாரிகள் குமாரபாளையம் வரவும், தொழில் வளம் பெருகவும் உதவியாக இருக்கும்.அவசர சிகிச்சைக்காக கோயம்புத்துார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்றால், பஸ் வசதி இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி, குமாரபாளையத்திலிருந்து, கோவை, நாமக்கல் செல்ல அரசு பஸ்விட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.