மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிக்கை
திருச்செங்கோடு: 'மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின், திருச்செங்-கோடு வட்ட கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட பொருளாளர் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் வடிவேல் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவக்-குமார் முன்னிலை வகித்தார். மாநில பொருளாளர் முருகசெல்வ-ராசன் இயக்க பேருரையாற்றினார். கூட்டத்தில், மத்திய அரசு பள்ளி ஆசிரியருக்கு இணையான சம்-பளத்தை தமிழ்நாட்டின் இடைநிலை, தொடக்கநிலை ஆசிரிய-ருக்கு வழங்க வேண்டும். நிதி மோசடி திட்டமான புதிய ஓய்வூ-திய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்-டத்தை தொடர வேண்டும். பெருந்தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட விடுப்பூதியம் உரிமையை ஆசிரியர்,- அரசு ஊழிய-ருக்கு மீண்டும் வழங்க வேண்டும். சட்டசபை தேர்தல் வாக்குறு-திப்படி, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகளை பள்ளி ஆசி-ரியருக்கு தொடர்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்-வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.