உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை

கருவாட்டாறு ஆற்றை துார்வார கோரிக்கை

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம்-காரவள்ளி பிரதான சாலையில், வெண்டாங்கி பகுதியில் கருவாட்டாறு உள்ளது. கொல்லிமலையில் கனமழை பெய்யும் போது, அங்குள்ள பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்-பட்டு, அங்கிருந்து வரும் தண்ணீர், அடர்ந்த வனப்பகுதி வழியாக, அடிவாரத்தில் உள்ள கரு-வாட்டாறு ஆற்றை சேர்கிறது. பின், அங்கிருந்து நீரோடை வழியாக, சின்ன-குளம் ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் மூலம் காரவள்ளி, சேந்தமங்கலம் சுற்று வட்டா-ரத்தில் உள்ள, 1,000 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், வெண்டாங்கி அருகே உள்ள கரு-வாட்டாறு ஆற்றில், அதிகளவில் செடி, கொடிகள் வளர்ந்து தண்ணீர் செல்லும் பாதை முற்றிலும் அடைத்துள்ளது. மேலும், சுற்றுலா வரும் பய-ணிகள், அங்கு அமர்ந்து மது அருந்துவது, சமைத்து சாப்பிடுவது என, அந்த இடத்தை அசிங்கப்படுத்தி வருகின்றனர். எனவே, கருவாட்-டாறு ஆற்றை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை