உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாசலுார்பட்டி படகு இல்லத்தில் மோட்டார் படகு இயக்க கோரிக்கை

வாசலுார்பட்டி படகு இல்லத்தில் மோட்டார் படகு இயக்க கோரிக்கை

சேந்தமங்கலம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலை வாசஸ்தலமான கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.விடுமுறை நாளான நேற்று, கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இங்குள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, நம் அருவி நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி நீர்வீழ்ச்சி மற்றும் சிற்றருவி, படகு இல்லம், தாவரவியல் பூங்கா மற்றும் அங்கு உள்ள அரப்பளீஸ்வரர் கோவில், எட்டுக்கை அம்மன் கோவில், பெரியசாமி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.கொல்லிமலையில் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குவது ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி. இதற்கு அடுத்த இடத்தில் இருப்பது வாசலுார்பட்டி படகு இல்லம்.தற்போது இந்த படகு இல்லத்தில், நான்கு பெடல் படகுகள் மட்டும் இயக்கப்படுகின்றன. சில சமயங்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும்போது படகுகள் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, கூடுதலாக, 5 அல்லது, 6 படகுகளை இயக்க கோரிக்கை வைத்துள்ளனர்.மேலும், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பெடல் படகில் பயணிப்பது கடினம். எனனே, 5 புதிய பெடல் படகுகள் மற்றும் 3 மோட்டார் படகுகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ