உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகோள்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டுகோள்

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பிரிவு சாலை அருகே, சாலையின் ஓரிடத்தில் சேதமடைந்துவிட்டது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து செல்ல செல்ல சேதம் அதிகரித்து பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் கொட்டி சமன்படுத்தப்பட்டது. ஆனால், கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் எல்லாம் மேலே வந்து, சாலையில் பரவலாக காணப்படுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக டூவீலரில் செல்வோர் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர்.எனவே, சேதமடைந்த பகுதியில் ஜல்லி, கற்கள் சமன் படுத்தி, தார் ஊற்றி பேட்ஜ் ஒர்க் செய்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை